ஐரோப்பா

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் : பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த மாத இறுதியில் நான்கு நாட்கள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

250 கடவுச்சீட்டு கட்டுப்பாட்டு வேலைகள் புதிய உள்துறை அலுவலகப் பட்டியலால் ஆபத்தில் உள்ளன என்று தொழிற்சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த வேலை நிறுத்தமானது ஏப்ரல் 29 ஆம் திகதி தொடங்கி மே 2 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நீடிக்கும் என்று பொது மற்றும் வணிகச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விமானத்தை தவறவிடாமல் இருக்க பயணிகள் குறித்த நேரத்திற்கு சற்று முன்பதாகவே விமான நிலையத்திற்கு வருவது நன்மை பயக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிசிஎஸ் மற்றும் உள்துறை அலுவலகம் இடையே நடந்து வரும் சர்ச்சையின் சமீபத்திய வளர்ச்சி இதுவாகும்.

இந்த வாரம் தொடங்கப்பட்ட மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு உள்துறை அலுவலகம் ஒப்புக்கொண்டதால், கடந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தம் PCS ஆல் வாபஸ் பெறப்பட்டது.

எவ்வாறாயினும் “வேலைநிறுத்தம் செய்வதற்கான தொழிற்சங்கத்தின் முடிவால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், ஆனால் PCS யூனியனுடன் ஒரு தீர்மானத்தை விவாதிக்க திறந்த நிலையில் இருக்கிறோம் என உள்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!