ஐரோப்பா

UKவில் ஹீத்ரோ விமான நிலையத்தின் எல்லைபடை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான எல்லைப் படை அதிகாரிகள் இந்த வாரம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.

இதன்படி மே- 31, ஜுன் 01,02 ஆகிய திகதிகளில் அவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கணிப்பின்படி 500இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் வெளிநடப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூன் 4 முதல் மூன்று வாரங்களுக்கு கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. பட்டியல் விவகாரம் காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடந்துள்ளது.

எங்கள் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் பட்டியலில் மாற்றங்கள் கொண்டு வரும் வரை இவ்வாறான வேலைநிறுத்த போராட்டங்கள் தொடரும் என பிசிஎஸ் பொதுச் செயலாளர் ஃபிரான் ஹீத்கோட் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!