சிங்கப்பூரில் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிகரிக்கும் இதய நோயாளர்கள்

சிங்கப்பூரில் இளைஞர்களிடையே இதய நோய்ச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 120,000 நோயாளிகளைக் கவனிப்பதாக தேசிய இதய நிலையம் தெரிவித்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் அது 50 சதவீதம் அதிகமாகும்.
சிங்கப்பூரில் மாரடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் மாரடைப்புப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு மொத்தம் 8,000 சம்பவங்கள். பத்தாண்டுகளுக்குப் பின் அந்த எண்ணிக்கை 12,000ஆக இருந்தது.
2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் மாரடைப்புச் சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மாரடைப்பு சிங்கப்பூரின் ஆகப்பெரிய உயிர்க்கொல்லி நோய். 2 ஆண்டுகளுக்கு முன், கிட்டத்தட்ட 30 சதவீத மரணங்களுக்கு காரணமாகியுள்ளது.