விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து
விக்டோரியா மாநில பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரம் சார்ந்த ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால், ஆயிரக்கணக்கான திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 3.75 சதவீத சம்பள உயர்வு போதுமானதல்ல எனக் கூறி, 6 சதவீத உயர்வைக் கோரி துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அறுவை சிகிச்சை கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முடங்கியுள்ளதோடு, அவசரமற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை சிகிச்சைகள் முற்றாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரை இந்தப் போராட்டம் தொடரவுள்ள நிலையில், அவசர சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சேவைகள் பாதிக்கப்படாது எனத் தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன.





