தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு : சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டு, தமது தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 19) அவர்களுடன் கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இணக்கம் தெரிவித்ததையடுத்து, கொடுப்பனவுகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளன.
இதன்படி நாளை (15) காலை 6.30 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 10 times, 1 visits today)