புதிய உணவுப் பாதுகாப்பு விதிகள் ஜூலை முதல் அமுல்
இலங்கையின் உணவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பல புதிய ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் திகதி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உணவு லேபிளிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதல், திரவ உணவுகளில் சர்க்கரை மட்டத்தைக் குறிக்கும் நிறக் குறியீட்டு முறை, உப்பில் அயோடின் சேர்த்தல் மற்றும் ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans fats) தொடர்பான ஒழுங்குவிதிகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஒழுங்குவிதிகள் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.





