டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31, 098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழுவிடம் அறிக்கை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
டெங்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த சுகாதார அதிகாரிகளுடன் பணிக்குழு செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.