முதியோர் படுக்கை தட்டுப்பாடு: மருத்துவமனைக்குள் 3,000 பேர் அவதி!
அவுஸ்ரேலியாவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படத் தகுதியான 3,000க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள், முதியோர் பராமரிப்பு படுக்கைகள் இல்லாததால் பொது மருத்துவமனைகளிலேயே சிக்கித் தவிக்கின்றனர். மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாக வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு $1.2 பில்லியன் செலவு ஏற்படுவதாக மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயாளிகள் கீழே விழுதல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர்.
அவுஸ்ரேலியா மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler, இது ஒரு தீவிரமான தேசியப் பிரச்சினை என்றும், தீர்வு காண மத்திய அரசும் மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வயதான மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், முதியோர் பராமரிப்பு முறையை வலுப்படுத்தாவிட்டால், மருத்துவமனைகளின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





