ஆபத்தை உணர்த்தும் தலைவலி – எப்போது கவனம் தேவை?
உலகில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு முறையாவது தலைவலி வந்திருக்கலாம். சிலருக்கு அந்தத் தலைவலிப் பிரச்சினை பலமுறை ஏற்பட்டிருக்கலாம்.
சிறிய தலைவலியை மாத்திரை, உணவு, காப்பி, தூக்கம் முதலியவற்றின்மூலம் தீர்க்கலாம்…
ஆனால் தீராத தலைவலியாக இருந்தால்?
சிலருக்குப் பக்கவாதம், மூளைக்கட்டி, ரத்தக்கட்டி போன்றவை இருக்கக்கூடும் என்ற பயம் ஏற்படுவது வழக்கம்.
நல்லவேளையாக அத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் தலைவலியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு தலைவலி குறித்து வெளியிட்ட தகவல்களை ‘செய்தி’ திரட்டியுள்ளது.
எப்போது கவலைப்படவேண்டும்?
சில நேரங்களில் சில விதமான தலைவலி ஏற்படுவது ஆபத்தைக் குறிக்கிறது:
– 50 வயதுக்குப் பின் முதல்முறையாக உருவாகும் தலைவலி
– வழக்கமான தலைவலியிலிருந்து வேறுபட்ட வலி
– வழக்கத்துக்கு மாறான கடுமையான தலைவலி
– இருமல், நகருதல் ஆகியவற்றால் மோசமாகும் தலைவலி
– நடத்தை, மூளைப் பயன்பாடு ஆகியவற்றை மாற்றும் தலைவலி
– காய்ச்சல், நகரமுடியாத கழுத்து, குழப்பம், கவனக்குறைவு, தெளிவாகப் பேச முடியாமல் இருப்பது, கண்பார்வைப் பிரச்சினை, ஞாபகக்குறைபாடு, பலவீனம், மரத்துப் போகும் உடற்பாகங்கள், வலிப்பு
– தலை அடிபட்டால் வரும் தலைவலி
– திடீரென்று வரும் தலைவலி
– புற்றுநோய், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு வரும் தலைவலி
மருத்துவரை நாடவேண்டும்….
சிலருக்கு உடலில் இருக்கும் பெரிய பிரச்சினைக்கான அறிகுறியாகத் தலைவலி அமையலாம்.
மருத்துவரைக் கண்டு அவரிடமிருந்து ஆலோசனை பெறுவது முக்கியம். சுயமாக மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.