உலகம் செய்தி

போருக்கு மத்தியில் அமெரிக்காவின் முக்கிய புள்ளி ராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் US’s National Counterterrorism Center இயக்குநர் ஜோ கென்ட் (Joe Kent) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது.

ஈரானுக்கு எதிரான போரை தன்னால் மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்எனக் கூறப்படுகின்றது.

டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட இவர், இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நடக்கும் இத்தகைய மோதல்கள் அமெரிக்காவின் செல்வத்தையும் உயிர்களையும் வீணடிப்பதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தேவையற்ற போர்களில் மடிவதை Joe Kent கடுமையாக எதிர்க்கிறார் எனவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!