இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் வரட்சியால் சூழல் வெப்பமடைந்து மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பத்துடனான காலநிலை தொடரும் போது, ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மருந்துகளை உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடலில் நீரின் அளவு குறையுமிடத்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமானதென கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் வலியுறுத்தியுள்ளார்.