இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்ற ஹரினி
புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி மற்றும் சமூக நீதிக்கான அவரது பணிக்காக அறியப்பட்ட அமரசூரியவின் நியமனம் இலங்கை அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் பதவியுடன், இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரானார் அமரசூரிய.
புதிய பிரதமர் பதவியேற்கும் முதல் கல்வியாளர்-அரசியல்வாதியாக தனித்து நிற்கிறார்.
அமரசூரிய 2020 ஆம் ஆண்டு NPP தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நுழைந்தார்.