செய்தி விளையாட்டு

தனிப்பட்ட காரணங்களால் இலங்கை தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா!

இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கைக்கு செல்ல உள்ளது.

இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களால் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு இந்திய அணி புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

டி20 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய பல மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் பல புதிய முகங்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் தயார் ஆகி வருகிறது. ஒருநாள் போட்டிகள் வடிவில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளதால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற ஒருநாள் உலகக் கோப்பையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹர்திக் பாண்டியா அதன் பிறகு தற்போது வரை இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை, மேலும் இலங்கைக்கு எதிரான இந்த தொடரையும் இழக்க உள்ளார்.

ஒருநாள் தொடரில் இருந்து விலகினாலும் டி20 தொடரில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாகவும் பொறுப்பேற்க உள்ளார்.

இருப்பினும், ஹர்திக் பாண்டியாவை நிரந்தரமாக கேப்டன் பொறுப்பில் உட்கார வைக்க சில பிசிசிஐ அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சியை கொடுக்கலாம் என்றும் யோசித்து வருகின்றனர். இந்நிலையில், டி20 போட்டிகளில் யார் கேப்டன் என்பதை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை புறக்கணிக்க வேண்டாம் என்று ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவிற்கு கவுதம் கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு பிறகு அவர்கள் ஓய்வு எடுக்க நீண்ட நாட்கள் இருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாட அவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இளம் அணியை இலங்கைக்கு அழைத்து செல்ல கம்பீர் விரும்பவில்லை என்பதால் மூத்த வீரர்களை அழைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் பும்ரா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது என்று முன்னர் கூறப்பட்ட நிலையில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி