2024 IPL தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்ட்யா
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்பு தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.
அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மீண்டும் ரோகித் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)





