ஒன்ராரியோ மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி – இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட விஜய்
இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட விஜய் தணிகாசலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் என்ற ரீதியில் ஒன்ராரியோ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட விஜய் தணிகாசலம் கடந்த மாதம் 22 ஆம் திகதி கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஸ்கான்பரோ – ரஃப் பார்க் மக்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள விஜய் தணிகாசலம்,
“ஒன்ராரியோ மாகாண மக்களுக்கு சேவையாற்றும் விதமாகக் கடந்த வாரம் நான் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக அங்கம்வகித்த விஜய் தணிகாசலம், அம்மாகாணத்தில் மேமாதம் 12 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலத்தை ‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ பிரகடனப்படுத்துவதில் முன்நின்று செயற்பட்டவராவார்.
விஜய் தணிகாசலத்தின் பெற்றோர் இலங்கையின் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.