Clean Sri Lanka திட்டம் ஆரம்பித்த நேரத்தில் தைப்பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி
இலங்கை மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தூய்மை இலங்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பு வரலாற்று ரீதியாக வளர்ந்த ஆசிய விழுமியங்களிலிருந்து பிரிக்க முடியாதது என்றும், தைப்பொங்கல் தினத்தில் வெளிப்படுத்தப்படும் விழுமியங்கள் இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கும் மக்களுக்கும் நற்காரியங்களைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள், தடைகள் இருந்தபோதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அசைக்க முடியாத உறுதியுடனும் பொறுப்புடனும் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.