ஹமாஸ் அமைப்பின் கணக்குகளை முடக்க போவதில்லை; விளக்கமளித்துள்ள டெலிகிராம் CEO
ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவது இல்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய இணையதளங்கள் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கி உள்ளது.
அந்த வகையில் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் ஹமாஸ் அமைப்பினரின் சமூக வலைதளங்களை முடக்கி வருகின்றனர்.இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவது இல்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
80 கோடி பயனர்களை கொண்டுள்ள டெலிகிராம் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து அந்த நிறுவனத்தின் CEO பவேல் டுரோவ் தெரிவித்துள்ள தகவலில், ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை டெலிகிராம் முடக்கப்போவது இல்லை.
ஏனென்றால் இஸ்ரேலின் ஆஷ்கெலான் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு டெலிகிராம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை தெரிவித்து இருந்தனர்.
அந்த எச்சரிக்கை செய்தி மூலம் தான் பல உயிர்கள் உயிர் பிழைத்தனர். ஒருவேளை ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கி இருந்தால் அன்று பல அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.