தாய்லாந்து நாட்டவர்கள் உள்பட மேலும் 08 பணயக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்!
ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் ஒரு குழு பிணைக் கைதிகள் இன்று (30) விடுவிக்கப்பட உள்ளனர்.
அவர்களில் மூன்று இஸ்ரேலியர்களும் ஐந்து தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுவிக்கப்படும் தாய்லாந்து நாட்டினர் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த 110 பாலஸ்தீனியர்கள் முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர்.
(Visited 43 times, 1 visits today)





