அண்டை நாடுகளை தாக்காதீர்: ஈரானிடம் ஹமாஸ் அமைப்பு கோரிக்கை!
அண்டை நாடுகள்மீதான தாக்குதலை ஈரான் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் Hamas அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுவானது, ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகவே கருதப்படுகின்றது.
ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலை ஹமாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த மோதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறும் இத்தகைய ஆக்கிரமிப்புகளைத் தடுக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்டை நாடுகளை இலக்கு வைப்பதைத் தவிர்க்குமாறு ஈரானிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.





