21 வயது அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கும் ஹமாஸ்

காசாவில் போர் நிறுத்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதியான எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
21 வயதானஎடன் அலெக்சாண்டர், அமெரிக்க குடியுரிமை பெற்ற தடுத்து வைக்கப்பட்டுள்ள கடைசி உயிருள்ள பிணைக் கைதி ஆவார்.
பாலஸ்தீனிய ஆயுதக் குழு கத்தாரில் உள்ள அமெரிக்க நிர்வாக அதிகாரியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹமாஸின் மூத்த அதிகாரி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பல நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஒரு சண்டையை உறுதி செய்வதிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை எளிதாக்குவதிலும் கவனம் செலுத்தியதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அலெக்சாண்டரை விடுவிப்பதற்கான ஹமாஸ் நோக்கம் குறித்து அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.