ஹமாஸ் கிளர்ச்சி குழுவின் ராணுவத் தலைவர் Mohammed Deif மரணம்
ஹமாஸ் கிளர்ச்சி குழுவின் ராணுவத் தலைவர் Mohammed Deif உயிரிழந்துவிட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களில் அவரும் ஒருவராகும்.
Deif உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் கடந்த ஆண்டு ஒகஸ்ட் முதல் திகதி தெரிவித்திருந்தது.
காஸாவில் நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த மூத்தத் தளபதி Rafa Salamaவும்
Deifவுடன் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
2002-ஆம் ஆண்டில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் ஆயுதப்படைக்குத் தலைவரானார் Deif
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இஸ்ரேலின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தவர்களில் அவரும் ஒருவராகும்..
2015-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் அனைத்துலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
(Visited 2 times, 2 visits today)