செய்தி

பிணைக்கைதிகளுடன் காசா மருத்துவமனையின் அடித்தளத்தில் பதுங்கிய ஹமாஸ் தீவிரவாதிகள்

காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி சில புகைப்பட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரன்தீஸி மருத்துவமனையை தங்கள் படையினர் சோதனையிட்ட போது அங்கு ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையின் அடித்தளத்தில் தற்கொலைப் படையினருக்கான ஆயுதங்கள் வெடிகுண்டுகள், ஏகே.47 துப்பாக்கிகள் போன்றவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களும் சிக்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மருத்துவமனையாக சோதனையிட்டு நோயாளிகளை பாதுகாத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி