மத்திய கிழக்கு

ஹமாஸ் தலைவரின் வீடு சுற்றிவளைப்பு; இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவல்

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள அதேவேளை அவர் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கின்றார் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர் அவரால் தப்பிச்செல்ல முடியும் ஆனால் நாங்கள் அவரை கைப்பற்றுவதற்கு வெகுநாட்கள் எடுக்காது என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அர்த்தம் ஹமாஸ் தலைவரை இஸ்ரேலிய படையினர் நெருங்கி விட்டனர் என்பதா என்ற கேள்விக்கு அவரது வீடு கான்யூனிஸ் பகுதியிலேயே உள்ளது என இஸ்ரேலிய படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் தரைக்குமேலே இல்லை நிலத்திற்கு கீழே இருக்கின்றார் இஸ்ரேலிய படையினரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த மேலதிக விபரங்களை நாங்கள் வெளியிடப்போவதில்லை.புலனாய்வு அடிப்படையில் எங்களிற்கு கிடைத்துள்ள தகவல்களையும் நாங்கள் வெளியிடப்போவதில்லை அவரை கண்டுபிடித்து கொல்வதே எங்கள் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content