ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் – போர் தொடரும் என இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் இயக்கத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் போர் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்வாரின் தீய நடவடிக்கைகள் – பயங்கரவாதம், இரத்தக்களரி, மத்திய கிழக்கில் நிலையற்றதன்மை ஆகியவற்றை ஏற்படுத்தியதாக இஸ்ரேலிய தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் பிணையாளிகள் அனைவரும் மீட்கப்படும்வரை போர் தொடரும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியுள்ளார்.
இதற்கிடையே, வட காஸாவின் ஜபலியா பகுதியில் இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் குழுவினர் அந்த இடத்தைத் தங்கள் சந்திப்புக்குப் பயன்படுத்தினர் என்று சொல்கிறது இஸ்ரேல். ஆனால் ஹமாஸ் அதை மறுக்கிறது.
திரு சின்வாரின் மரணத்தை ஹமாஸ் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ராஃபாவில் (Rafah) கண்டெடுக்கப்பட்ட உடல் மூலம் சின்வாரின் அடையாளத்தை உறுதி செய்ததாகச் சொல்கிறது இஸ்ரேல். சிறை ஆவணங்களின்படி பல் அமைப்பு, விரல் ரேகை ஆகியன பொருந்திப் போவதாக இஸ்ரேல் கூறுகிறது.