கத்தாரில் அடக்கம் செய்யப்படவுள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) இறுதி ஊர்வலம் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, டெஹ்ரானில் வியாழக்கிழமை அவருக்கு இறுதிப் பிரியாவிடை அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இறுதி பயணத்திற்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி (Ayatollah Ali Khamenei) தலைமை தாங்கினார்.
இதையடுத்து ஹனியாவின் உடல் கத்தாருக்கு கொண்டு வரப்பட்டது.
தோஹாவில் உள்ள லுசைலில் உள்ள கல்லறையில் ஹனியே அடக்கம் செய்யப்படுவார் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன், கத்தாரின் மிகப்பாரிய இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் மசூதியில் ஹனிய்யாவுக்கான இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.
(Visited 66 times, 1 visits today)