டெடி பியர்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தும் ஹமாஸ் – இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
டெடி பியர்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்துவதைக் காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கி 2 மாதங்களுக்கு மேலாகிறது. போரை ஆரம்பித்தது ஹமாஸ் என்றாலும் தற்போது இஸ்ரேல் தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் துன்பப்படுகிறார்கள்.இதுவரை காஸாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது போரின் நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது.
மனித குலத்தின் நலனுக்காகப் போரை நடத்துவதை நிரூபிப்பதற்காக தனது தரப்பிலிருந்து வாதங்களையும், ஆதாரங்களையும் வழங்குவதில் மும்முரமாக உள்ளது. என்ன செய்தாவது ஹமாஸை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் இஸ்ரேல், ஹமாஸ் பொது மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக கூறுகிறது.
https://twitter.com/i/status/1733475339576189129
அதை நிரூபிக்கும் வகையில் டெடி பியர்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்துவதைக் காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தும் இஸ்ரேலுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் சூழலில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவும் இஸ்ரேல் மீது தொடர் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஸாவில் மனிதாபிமான உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். ஹமாஸ் தாக்குதலுக்கு தண்டனையை பாலஸ்தீனத்தின் பொது மக்களுக்குக் கொடுப்பது தவறானது என்று அன்டோனியோ கூறினார். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஐநா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை என்பதால் கவலைகள் அதிகரித்துள்ளன.