பெய்ஜிங்கில் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹமாஸ் மற்றும் ஃபத்தா
காசா மீதான இஸ்ரேலின் போர் முடிவடைந்தவுடன் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாலஸ்தீனிய பிரிவுகள் “தேசிய ஒற்றுமை” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மூன்று நாள் தீவிரப் பேச்சுக்களுக்குப் பிறகு சீனாவில் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், போருக்குப் பிந்தைய காசாவை ஆள்வதற்கு “இடைக்கால தேசிய நல்லிணக்க அரசாங்கத்திற்கு” அடித்தளம் அமைக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
நீண்ட கால போட்டியாளர்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தா(பாலஸ்தீனிய தேசியவாத மற்றும் சமூக ஜனநாயக அரசியல் கட்சி) மற்றும் 12 பாலஸ்தீனிய குழுக்களால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தி மாநாட்டில் ஹமாஸின் மூத்த அதிகாரி மௌசா அபு மர்சூக், “இன்று நாங்கள் தேசிய ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்” என தெரிவித்தார்.