போர் நிறுத்தத்திற்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றச்சாட்டு
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே,இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு தடைகளை ஏற்படுத்தியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
எந்தவொரு காசா போர்நிறுத்த ஒப்பந்தமும் இஸ்ரேலின் நோக்கங்கள் நிறைவேறும் வரை மீண்டும் போரைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
“சியோனிச ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு வசதியாக ஹமாஸ் இயக்கம் நெகிழ்வுத்தன்மையையும் நேர்மறையையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், நெதன்யாகு தனது ஆக்கிரமிப்பு மற்றும் எங்கள் மக்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கும்போது பேச்சுவார்த்தைகளின் வழியில் கூடுதல் தடைகளை வைக்கிறார்,” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)