வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க் கொலை வழக்கில் துப்பாக்கிதாரி கைது

வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தெற்கு உட்டாவில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 22 வயது டைலர் ராபின்சன் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டதை உட்டா ஆளுநர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரிசோனாவுடன் மாநில எல்லைக்கு அருகில் உள்ள வாஷிங்டன் கவுண்டியில் ராபின்சன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராபின்சன் கண்காணிப்பு படங்களுடன் ஒத்துப்போகும் ஆடைகளை அணிந்திருப்பதைக் காண முடிந்தது என்றும், துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறுஞ் செய்திகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)