மலேசியாவில் 10 வயதுச் சிறுவனின் உயிரை பறித்த Gummy மிட்டாய்

மலேசியாவில் gummy மிட்டாய் தொண்டையில் சிக்கி 10 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தகவலைச் சிறுவனின் உறவுக்காரப் பெண் உறுதிப்படுத்தியுள்ளார்.
முகம்மது ஃபஹ்மி ஹபிஸ் முகம்மது ஃபக்ருடின் (Mohamad Fahmi Hafiz Mohamad Fakhruddin) எனும் அச்சிறுவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இதற்குமுன்னர் கூறப்பட்டது.
மாண்ட சிறுவனின் இறுதிசடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)