குஜராத் – ஜாமீனில் வெளிவந்து 70 வயது பெண்ணை மீண்டும் கற்பழித்த நபர்
ஜாமீனில் வெளிவந்த 35 வயது ஆடவர், குஜராத்தின் பருச் மாவட்டத்தில் கடந்த காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 70 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஷைலேஷ் ரத்தோட், டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 22 ஆகிய தேதிகளில் பண்ணையில் உள்ள மூதாட்டியின் குடிசையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.எல்.சௌத்ரி தெரிவித்தார்.
மேலும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து அமோத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு, சிறப்பு அதிரடிக் குழு மற்றும் காவல்துறையின் குழுக்கள் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க அமைக்கப்பட்டன.
ஷைலேஷ் ரத்தோட், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இதே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தபோது அவர் மீண்டும் குற்றத்தைச் செய்தார் என்று போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.