குஜராத் – ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு தானம் கொடுத்த கோடீஸ்வர தம்பதி
குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த ஜெயின் தொழிலதிபர்கள் பவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி தான் இப்படிச் செய்துள்ளனர். அவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் அனைத்து செல்வங்களையும் மக்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த மாதம் நடக்கும் மத நிகழ்வில் அவர்கள் முழுமையாகத் துறவு வாழ்க்கைக்குச் செல்கிறார்கள்.
இதற்காக அவர்கள் ஏப்ரல் 22ஆம் திகதி உறுதிமொழி ஒன்றை ஏற்க உள்ளனர். அதன் பிறகு இந்த தம்பதியினர் அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.. அதாவது குடும்பம் உறவு என யாரையும் கருதக்கூடாது. ஒட்டுமொத்த உலகத்தையும் இவர்கள் குடும்பமாகக் கருத வேண்டும். மேலும், எந்த பொருளையும் இவர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே விதியாகும்.