செய்தி விளையாட்டு

மான்செஸ்டர் சிட்டி உடனான ஒப்பந்தத்தை நீட்டித்த கார்டியோலா

மான்செஸ்டர் சிட்டியின் மேலாளர் பெப் கார்டியோலா இரண்டு வருட ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால் அவர் 2027 வரை பிரீமியர் லீக் சாம்பியன்களில் அணியுடன் பணியாற்றுவர்.

அவரின் தலைமையின் கீழ், ஆறு லீக் பட்டங்கள் மற்றும் ஒரு சாம்பியன்ஸ் லீக் கிரீடம் போன்றவை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது.

கார்டியோலாவின் தற்போதைய ஒப்பந்தம் சிட்டியின் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

பார்சிலோனா மற்றும் பேயர்ன் முனிச்சில் முன்பு வெற்றிகரமான தலைமைத்துவத்தை வழங்கிய 53 வயதான கார்டியோலா “மான்செஸ்டர் சிட்டி என்பது எனக்கு மிகவும் முக்கியம்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இது இங்கே எனது ஒன்பதாவது சீசன்; நாங்கள் ஒன்றாக பல அற்புதமான நேரங்களை அனுபவித்திருக்கிறோம். இந்த கால்பந்து கிளப்பைப் பற்றி எனக்கு ஒரு சிறப்பு உணர்வு உள்ளது. அதனால்தான் இன்னும் இரண்டு பருவங்கள் தங்கியிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!