இலங்கை : மாணவர்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவாதம்!
இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் வங்கிகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் எதிர்மறையான முடிவுகளால் குழந்தைகளின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி செல்லும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் கல்வியில் எதிர்மறையான விளைவுகளை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இந்த சதவீதம் அதிகமாக இருப்பதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய பாதிக்கப்படக்கூடிய பள்ளி மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்தில், 2025 ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் படிப்பைத் தொடங்குவதற்குத் தேவையான பள்ளி எழுதுபொருட்களை வாங்குவதற்கு உதவித்தொகையை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.