சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தக போர்!
சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது.
மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய சந்தையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தற்போது பெரும் போட்டியாக மாறியுள்ளது.
துறைமுக நகரமான நிங்போவிற்கு வெளியே, சீன கார் நிறுவனமான Zeekr ஆடம்பர EVகளை வெளியிட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.
மூன்று ஆண்டுகளாக தொழிற்சாலை இயங்கி வருகிறது, ஆனால் இந்த ஆண்டு அது இரட்டிப்பு உற்பத்தியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விமர்சகர்கள், சீன அரசாங்கத்தின் நிதி ஆதரவு மற்றும் பரந்த வளங்கள் Zeekr போன்ற நிறுவனங்களுக்கு நியாயமற்ற நன்மையை அளிக்கிறது என்று கூறுகின்றனர்.
பெய்ஜிங்கிற்கு சமீபத்தில் அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லென் மேற்கொண்ட பயணத்தில், சீனா தனது EVகளை வெளிநாட்டு சந்தைகளில் “அதிக உற்பத்தி” மற்றும் “திணிப்பு” செய்வதாக குற்றம் சாட்டினார்.
சீனாவின் தொழில்துறை மீது அபராத வரிகளை விதிக்க வேண்டுமா என்பது குறித்து ஐரோப்பிய ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





