அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராகிறது கிரீன்லாந்து!
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபடுவதற்கு அந்நாடு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
“ அமெரிக்கா மற்றும் டென்மார்க் அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பில் கிரீன்ஸ்லாந்தும் பங்கேற்கும்.” – என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
“ சந்திப்பை கோரியது நாம்தான், எனவே, நிச்சயம் அதில் பங்கேற்போம்.” – எனவும் அவர் கூறினார்.
கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீரிமாக ஆலோசித்துவருகின்றார்.
இராஜதந்திரம் ஊடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண அவர் விரும்புகின்றார் எனவும், தேவையேற்படின் இராணுவ நடவடிக்கைக்கும் தயாராகவே இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து , வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
டென்மார்க்குக்கு சொந்தமானதாக இருந்தாலும், அந்தத் தீவு தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் என அமெரிக்கா கருதுகின்றது.
அமெரிக்கா மற்றும் டென்மார்க்குக்கு இடையிலான இராஜதந்திர சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.





