கிரீன்லாந்து டென்மார்கின் ஒருங்கிணைந்த பகுதி – உறுதிப்பட தெரிவித்த ரஷ்யா!
கிரீன்லாந்தை டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதுவதாக ரஷ்யா இன்று உறுதிப்பட தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பு அசாதாரணமானது எனவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மேற்கத்தேய நாடுகள் முன்வைக்கும் கூற்றுக்களையும் ரஷ்யா விமர்சித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ( Dmitry Peskov), தீவைச் சுற்றியுள்ள நிலைமையை மொஸ்கோ கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.
கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்க்டிக்கில் அதன் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதைத் தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.





