ஐரோப்பா

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஐரோப்பிய நாடு

கிரீஸின் நாட்டில் கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் முக்கிய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையினால் புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் குடியேறிகளைப் பயன்படுத்த கிரீஸ் முடிவெடுத்துள்ளது.

முக்கிய துறைகளில் பணிபுரிய குடியேறிகளுக்கு அது மூன்று ஆண்டுகள் அனுமதி வழங்க இருக்கிறது.

மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து அடைக்கலம் நாடுவோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் என ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புகுவதற்கு கிரீஸ் நுழைவாயிலாக உள்ளது.

அவர்களில் பலர் கிரீஸின் கட்டுமானத்துறை, விவசாயம், சுற்றுப்பயணத்துறை ஆகியவற்றில் சட்டவிரோதமாகப் பணிபுரிகின்றனர்.

பொருளாதார நெருக்கடியில் 2018ஆம் ஆண்டு ஒருவழியாக மீண்டு வந்த கிரீஸை கொவிட்-19 புரிட்டிப்போட்டது. கிரெக்க ஊழியர்கள் பலர் சொந்த நாட்டைவிட்டு வெளியேறினர். அவர்களில் பலர் கிரீசுக்குத் திரும்பவில்லை.

கடந்த ஜூன் மாதம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த கன்சர்வேட்டில் அரசாங்கம் குடியேறிகள் நாட்டுக்குள் வருவதைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக்கியது.

தற்போது கிட்டத்தட்ட 300,000 சட்டவிரோத குடியேறிகள் கிரீஸில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. குடியேறிகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் இருப்பது விரும்பத்தகாத ஒன்று என்று கிரேக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டு அனுமதி, குடியேறிகளை ஈர்க்கும் என்று அது நம்புகிறது. அனுமதிக்குத் தகுதி பெற கிரீஸில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு இருந்திருக்க வேண்டும். அத்துடன் குற்றப் பதிவுகள் இருக்கக்கூடாது. மேலும், வேலை கிடைத்திருக்க வேண்டும்.

தகுதி பெறுபவர்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மூன்றாண்டு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்