50c வெப்ப அலையுடன் போராடும் க்ரீஸ் : 06 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

க்ரீஸில் வெப்ப அலை காரணமாக ஏறக்குறைய 06 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு தற்போது 50C க்கும் அதிகமான வெப்பநிலையுடன் போராடி வருகிறது.
இந்த வார தொடக்கத்தில், கிரீஸ் மிகவும் வெப்பமான, வறண்ட மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டது.
காட்டுத்தீ காரணமாக 06 கிராம பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தீவிர வெப்பம் நீடிக்கும் என்று கணித்துள்ளனர். நகரத்தின் வீடற்ற மக்களுடன் பணிபுரியும் சமூக சேவையாளர்கள், செவிலியர்கள் மற்றும் உளவியலாளர்கள் தெருக்களில் தண்ணீர், உணவு, காபி மற்றும் பாதுகாப்பு கருவிகளை விநியோகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)