வேலைநேரம் 13 மணித்தியாலம் – சர்சைக்குரிய சட்டத்தை இயற்றிய கிரேக்கம்!
கிரேக்க அரசாங்கம் தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு 13 மணித்தியாலம் பணிப்புரிவதற்கான சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றியுள்ளது.
ஆனால் விமர்சகர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலை நேர உத்தரவுக்கு இணங்குவதாகவும், நீண்ட நேரம் வேலை செய்தாலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றின் தரவுகளின்படி, முழுநேர ஊழியர்கள் ஆண்டுக்கு சுமார் 1,900 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இது இங்கிலாந்தில் 1,510 மணிநேரமும் ஜெர்மனியில் 1,330 மணிநேரமும் ஆகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரேக்க தொழிலாளர் நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 94% தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு இல்லாமல் குறுகிய வேலை நேரத்தை ஆதரிப்பதாகவும், கிட்டத்தட்ட 60% பேர் 13 மணி நேர நாளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கிரேக்க தொழிலாளர்கள் பல போராட்டங்களை தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாளை பெற்றனர். தற்போதைய சட்டம் இந்த வெற்றியை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.





