பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளனர் .
சிலிண்டர் விலை உயர்வு, ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவரையும் ஒடுக்கும் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் நாள்தோறும் கடந்த 9ஆண்டுகளில் சந்தித்து வந்திருந்தனர்.
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு மதப் பிரச்சினைகளைத் தூண்டி குளிர் காய நினைத்த பா ஜ க அரசை கர்நாடக மக்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
என்னென்ன சதி வேலைகள், என்னென்ன ஒடுக்குமுறைகள் எதற்கும் அடங்காமல் , ஒடுங்காமல் கர்நாடக மாநிலத்தையே பம்பரம் போல் வளம் வந்து, இன்று மதசார்பின்மைக்கு எதிரான மாநிலங்களில் கர்நாடகமும் இணைந்திருப்பது தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த பரிசு.
இளம் தலைவர் ராகுல் காந்தி ,அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரின் கடின உழைப்பின் மூலம் இந்த வெற்றியை அன்னை சோனியா காந்தியிடம் வழங்கி உள்ளனர்.
மேலும் இதற்காக துணை நின்று கடினமாக போராடி காங்கிரஸ் கட்சியை கர்நாடக மாநிலத்தில் அரியணையில் அமர்த்திய மாநில தலைவர் டி கே சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பல்வேறு யுக்திகளை வகுத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பணிபுரிவதற்கு வாய்ப்பாக ஹாசன் நாடாளுமன்ற தொகுதி மேலிட பார்வையாளராக என்னை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என அனைவருக்கும் எனது நன்றிகள்.
அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க இருக்கும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்த கர்நாடக மக்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெற்று தலைவர் ராகுல் காந்தி பிரதமாராக அரியணை ஏறுவதற்கு அட்சரமாக இருக்கட்டும் நாடு வளம் பெறட்டும். என தனது அறிக்கையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.