ஐரோப்பா

UKவில் பிரமாண்டமாக இடம்பெறும் நெருப்பு திருவிழா : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் பிரமாண்டமாக இடம்பெறும்   நெருப்பு இரவு விழாக்களை ‘The Bonfire Night capital of the world’ கண்டு மகிழ பல்லாயிர கணக்கானோர் தலைநகரில் ஒன்றுக்கூடுவது வழமை.

இந்நிலையில் இவ்வருடம் மக்கள் தலைநருக்கு வருவதற்கு பதிலாக உள்ளுர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

1606 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 05 ஆம் திகதி இந்த நெருப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும், 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுக்கூடும் இவ்விழாவில்  தீப்பந்தம் ஏந்தி மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வர். அது மாத்திரம் இல்லாமல் உருவ பொம்மைகளும் எரிக்கப்படும்.

இவ்வருடம் இடம்பெற்றும் விழாவில் சசெக்ஸ் காவல்துறை நாடு முழுவதிலும் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறது.

குறுகிய தெருக்களில் தனிநபர்கள் நெருப்புடன் நடந்து செல்வதைப் பற்றி கவலைப்பட்ட அதிகாரிகள், உள்ளூர் அல்லாதவர்களை வீட்டிலேயே தங்கி தங்கள் சொந்த பகுதிகளில் இடம்பெறும் விழாவில் கலந்துகொள்ளுமாறு எச்சரித்துள்ளனர்.

(Visited 42 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!