பாட்டியை கவனித்துக்கொள்வது கஷ்டமாக இருந்ததால் பேரன் செய்த செயல் !
ஜேர்மனியில், 100 வயதான தனது பாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜேர்மானியர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
Hamburg நகரில் வாழ்ந்து வந்த தனது 100 வயது பாட்டியை கவனித்துவந்துள்ளார் அந்த 37 வயது நபர். ஆனால், அவருக்கு பாட்டியை கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது.தன்னால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படவே, அவர் தனது பாட்டியை கோடரியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். மார்ச் மாதம் 6ஆம் திகதி, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மறதி பிரச்சினையால் அவதியுற்ற அந்த 100 வயது மூதாட்டி சக்கர நாற்காலி உதவியுடனே நடமாடிவந்துள்ளார்.திடீரென தனது பேரன் தன்னைத் தாக்க, தடுக்க முயன்ற அந்த மூதாட்டி சக்கர நாற்காலியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.தலையிலும் கழுத்திலும் 16 வெட்டுக்கள் விழ, அவரது தோல் எலும்பு முறிந்ததுடன், முதுகெலும்பிலும் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் அவர்.
தன் பாட்டியைக் கொன்றுவிட்டு பொலிஸாரை அழைத்து நடந்ததைக் கூறியுள்ளார் அந்த மூதாட்டியின் பேரன். பொலிஸார் அவரைக் கைது செய்ய, எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களுடன் சென்றுள்ளார் அவர்.இந்த வழக்கு, ஜேர்மனியிலுள்ள Hamburg நகரில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.