சீனாவின் திருமணத்திற்காக அறிமுகமாகும் பட்டப்படிப்பு!
சீனாவின் திருமணப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
சிவில் விவகாரப் பல்கலைக்கழகம் இந்த பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த மாதம் அதிகாரபூர்வமாகத் தொடங்கும் அதில் 70 மாணவர்கள் சேரவிருக்கின்றனர்.
திருமணம் சார்ந்த துறைகள், கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்த அந்தத் திட்டம் முனைகிறது.
பட்டப்படிப்பில் சீனாவின் திருமணத் துறையின் வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும்.
திருமண விகிதம் குறைந்துவரும் நாட்டில் திருமணம் தொடர்பான பட்டப்படிப்பு எதற்கு அறிமுகமாகிறது என்று இணையவாசிகள் வினவுகின்றனர்.
குழந்தைப் பிறப்பு விகிதம் சரிவதைச் சமாளிக்க சீனாவில் கொள்கை வகுப்பவர்கள் பாடுபடுகின்றனர்.





