இலங்கை

இலங்கை : தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிவு: வெளியான புதிய தகவல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் அதற்கான விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசாரணை முடிவடையும் வரை தாள் குறியிடல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகளை கருத்திற்கொண்டு அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து இறுதித் தீர்மானம் எடுக்கும் என திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிந்துள்ளமை விசாரணைகளின் மூலம் நிரூபணமானால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இரண்டு ஆய்வுகளின் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் செயல்படுமாறு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் கல்வி மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 15) இடம்பெற்றது, ஆனால் பரீட்சைக்கு சில நாட்களுக்கு முன்னர் பரீட்சையின் தாளில் இருந்த கேள்விகள் போன்ற கேள்விகள் பரீட்சைக்கு சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

இது தொடர்பாக பல பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு அறிவித்ததை அடுத்து, பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!