இலங்கை அரசு பாதுகாப்பு படையில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்யும் முடிவு நியாயமற்றது: நாமல்

பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்புப் படையில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையில் இருந்து தப்பியோடிய அனைவரையும் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்வது நியாயமானதல்ல என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைகளில் சிலர் தவறான செயல்களில் ஈடுபடலாம் என்றும், அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்புப் படையில் இருந்து தப்பியோடியவர்கள் குறித்து அரசாங்கம் விரிவான விவாதத்தை நடத்த வேண்டும் என்றும், சட்டப்பூர்வமாக அவர்களை வெளியேற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அத்தகைய நபர்கள் மீது அரசாங்கம் ஒரு கண்காணிப்பு செயல்முறையை உருவாக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.