UKவில் புகலிட விடுதிகளை மூடும் அரசாங்கம் – ஜெர்மனியுடன் புதிய ஒப்பந்தத்திற்கும் ஏற்பாடு!
பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வசந்த காலம் முதல் புலம்பெயர்ந்தோர் விடுதிகளை மூடவுள்ளாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்நடவடிக்கையின்போது இராணுவ முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றங்களை அதிகரிக்கவும், சில புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வீட்டுவசதி மற்றும் நிதி உதவியை ரத்து செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2029 ஆம் ஆண்டுக்குள் அனைத்து புகலிடக் விடுதிகளின் பயன்பாட்டையும் நிறுத்துவதாக தொழிற்கட்சி உறுதியளித்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை பிரான்சுடனான ‘வன் இன், வன் அவுட்’ (‘one in, one out’) ரிட்டர்ன்ஸ் ஒப்பந்தத்தை விரிவுபடுத்த அமைச்சர்கள் முயற்சித்து வருவதுடன், ஜெர்மனியுடனும் இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பெறுவதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





