இந்தியா

அதிகாரிகளின் தெருக்கடி காரணமாக ஆசிட் குடித்து அரசு ஊழியர் தற்கொலை…!

ராய்ச்சூரில் அதிகாரிகளின் நெருக்கடியால் நிலப்பதிவேடு அலுவலக ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.சி அலுவலகத்தில் நிலப்பதிவேடு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியவர் வாசிம் சவுத்ரி(36). இவர் ரெய்ச்சூரில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியம் அருகே உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்றார்.

அங்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்தார். இதனால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருந்த வாசிம் சவுத்ரி சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

India: Man dies after consuming acid, mistaking it for alcohol - News |  Khaleej Times

இச்சம்பவம் குறித்து ராய்ச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலக மேலதிகாரிகளின் நெருக்கடியால், வாசிம் சவுத்ரி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், ஆசிட் குடித்து இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

ஆனால், அவரைக் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைக்கப்பட்டுள்ளதாக வாசிம் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் இவ்வழக்கை பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் நெருக்கடியால் நிலப்பதிவேடு அலுவலக ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்த சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே