இலங்கை – முப்படை வீரர்களின் உரிமைகள் குறைக்க தயாராகும் அரசு?
இலங்கை – முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.
“முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை குறைக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன். எவ்வாறாயினும், முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எந்த நேரத்திலும் குறைக்கும் எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்பதை நான் முறையாகப் பிரகடனப்படுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.
இலங்கை விமானப்படை (SLAF) தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தின் போது விமானப்படை வீரர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் விமானப்படை தலைமையகத்தின் பல பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.