நாமல் ராஜபக்சவை கைது செய்ய திட்டமிடும் அரசாங்கம்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்சவுக்கு நேற்று பிற்பகல் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2029 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாகிவிடுவார் என்ற அச்சம் காரணமாக ராஜபக்ச குடும்பத்தை வேட்டையாட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
இந்த வேட்டைக்குப் பின்னால் ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நியாயமான அச்சம் அரசாங்கத்திற்கு இருப்பது தெளிவாகிறது என்று வழக்கறிஞர் மனோஜ் கமகே கூறினார்.